
மீன் பிடிக்க கடலுக்கு போன நாங்க
எங்கள பிடிக்க ராணுவம் வர்றது ஏங்க?
வயித்து பிழைப்புக்காக கடலுக்கு போறோம் நாங்க
பொழுதுபோக்குக்காக எங்கள சுட்டு பழகுறாங்க
கடலம்மா கொந்தளிச்சா !சுனாமியா எங்களை அழிச்சா !!
கட்டுமரத்துல போன அந்தோணி இப்ப கட்டைல போறது ஏங்க ?
எங்க வாழ்க்கைல மொத்தமா நெறஞ்சு இருக்கிறது நிராசை
அரசாங்கம் சொல்லுது செத்துபோனா அது உங்க பேராசை !!
செத்தவன திட்டுறான் ,சுட்டவனோ சிரிக்கிறான்
சாவு ஒன்னும் மோசமில்லை,எங்களுக்கு காவு ஒன்னும் புதுசுமில்லை
கடலால இருக்குற உசுரு கடலோட போகட்டும்
உடலால தினம் நாங்க செத்தா தினம் அழ இங்க என்ன மிச்சம் !!
உசுர விட்டவன் உசரத்துக்கு ஓடி போய்ட்டான்
மிஞ்சி வாழ்றவன் அஞ்சி அஞ்சி நித்தம் சாகுறான் !
No comments:
Post a Comment