Thursday, February 3, 2011

நல்லுறவு அல்ல... கொல்லுறவு - தமிழ்நாட்டு வார இதழ்


வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஆனந்தவிகடன்' வார இதழ் தனது தலையங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. அந்த தலையங்கத்தின் முழுவிபரமாவது,

'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.

இலங்கைக் கடற்படையின் அராஜகத் தாக்குதலில் ஐந்நூறாவது மீனவர் சாகட்டும் என்று காத்திருந்து, அதைக் கொண்டாடவா இந்தப் பயணமும் அறிவிப்பும்? ஒருவரையும் சாகவிடாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போட முடியும் என்பது உண்மையானால், ஏன் இத்தனை தாமதம்?

இலங்கை - இந்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவி வரும் விநோதமான நட்பு உணர்வு, சாமானியர்கள் தொடங்கி தலைவர்கள் வரையில் எத்தனையோ உயிர்களுக்குச் சமாதி கட்டியிருக்கிறது. உலகமே கொதித்துக் கண்டித்தபோதும், துளிகூட அலட்டிக்கொள்ளாமல், தோளில் கை போட்டுக்கொண்டு பொருத்தமான பொய்களைச் சொல்லிச் சமாளிப்பதில் இந்த இரு அரசுகளின் ஒற்றுமை உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை என்பதுதான் எப்போதும் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயம். இப்போது தேர்தல் நெருக்கம் என்பதால், வீடு தேடிச் சென்று ஆறுதல் சொல்வதும், 'மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாள் விழாவை அரசே கொண்டாடும்' என்று அறிவிப்பு செய்வதுமாக, சற்றே விசேஷக் காட்சிகள்கொண்ட அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன!

தனியார் நிலத்தில் மேய வரும் காட்டு விலங்குகள், மின்வேலியால் தாக்குண்டு இறந்துபோனால், நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்துகிறது அரசாங்கம்.

வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

தமிழ்நாட்டு மீனவர்கள் 378பேர் இதுவரை சிறிலங்கா கடற்படையால் படுகொலை


1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

இவ்வாறு இந்தியாவின் ஆங்கில ஊடகமான The Times of India வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அந்த செய்திக் கட்டுரையின் முழுவிபரமாவது,

டிசம்பர் 08 2008 அன்று பாபு என்ற இந்த மீனவன் கடலுக்குச் சென்றபோது இதுதான் தனது இறுதிப்பயணம் என்பனை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் கடலுக்குப் புறப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் பாக்கு நீரிணையிலுள்ள கச்சதீவுப் பகுதியில்வைத்து பாபு சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கினைப் பதிவுசெய்த நாகபட்டினம் காவல்துறையினர் சிறிலங்காவினது கடற்படையினரே இந்தக் கொலைக்குப் பொறுப்பு என தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்நாட்டு மீனவன் சுடப்பட்ட செய்தி வெளியே வந்தபோது வழமைபோலவே அரசியல் கட்சிகள் அனைத்தும் வரிந்துகட்டிக்கொண்டு எழுந்தன. ஆனால் முன்னர் இடம்பெற்றதைப் போலவே ஒரு சிலமாதங்களின் பின்னர் இந்த வழக்கும் மூடப்பட்டது.

நாகபட்டினத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்துவரும் பாபுவினது மனைவி சரஸ்வதி தனது கணவன் கொலைசெய்யப்பட்டமைக்கான பதிலுக்காக இன்றும் காத்திருக்கிறாள். "எனது கணவர் இறந்தபோது 20,000 ரூபாய்களை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் எனது கணவரின் உயிருக்கு எதுவும் ஈடாகாது. குறித்த அந்த நாளில் நான் அனைத்தையுமே இழந்துவிட்டேன்" என்கிறாள் சரஸ்வதி.

1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

"கச்சதீவு சிறிலங்காவிற்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் 1975ம் ஆண்டு ஆரம்பித்தன" என ஆய்வாளரும் ஒளிப்படக் கலைஞருமான செல்வபிரகாஸ் கூறுகிறார். இராமேஸ்வரத்தினை அண்டியிருக்கும் கச்சதீவு 1974ம் ஆண்டு சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ரைம்ஸ் ஒவ் இந்தியாவிற்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களிலுள்ள காவல்நிலையங்களில் இந்திய துப்பாக்கிகள் சட்டத்தின் 307ம் பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான வழக்குகளில் குறிப்பட்ட இந்தச் சம்பவமானது "கச்சதீவுக்கு அருகாக இந்தியக் கடல் எல்லையில் இடம்பெற்றது" என்றும் இதற்குச் சிறிலங்காவினது கடற்படையினர்தான் பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் போதிய தகவலின்மையினாலும் தாக்குதலாளிகள் தொடர்பான ஆதாரங்கள் இன்மையினாலும் கைவிடப்பட்டிருக்கிறது.

"மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு எதிரான வழக்குகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு வழிசெய்கிறதே தவிர வேறெதற்குமில்லை. சிறிலங்காக் கடற்படையினரின் தாக்குதலினால் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட பல நூற்றுக்கண்க்கான மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் போதிய எதனையும் செய்யவில்லை" என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் கூறுகிறார். கச்சதீவுக் கடற்பிராந்தியத்திலேயே அதிக இறால் பிடிபடுவதால் அதிகளவிலான மீனவர்கள் இந்தப் பகுதியினை அதிகம் நாடிச்செல்கிறார்கள்.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் 2009ம் ஆண்டு புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் சம்பவங்களின் அளவு சற்றுக் குறைந்திருப்பதாகவும் கல்விமானங்களும் செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள்.

"இதுபோல போர் முடிவுக்குவந்துவிட்ட பின்னரும் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதானது மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விடயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது" என்கிறார் பீப்பிள் வோச் என்ற தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த ராஜன். "புதுடில்லியினைப் பொறுத்தவரையில் சிறிலங்கா, பாகிஸ்தானைப் போல் அல்லாமல் அதன் நட்பு நடாகும். ஆனால் பாகிஸ்தான்கூட இதுவரை இந்திய மீனவர்கள் ஒருவரையேனும் சுட்டுக்கொன்ற வரலாறு கிடையாது" என்றார் அவர்.

சிறிலங்கா கடற்படையினரின் செயற்பாடுகள் அவர்கள் அனைத்துலக நெறிமுறைகளின் வழி ஒழுகுகிறார்கள் என்பதைக் காட்டவில்லை என வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான வல்லுநர்கள் குழுவில் அங்கம் வகித்த வி. சூரியநாராயணன் கூறுகிறார். அனைத்துலக ரீதியில் நோக்குமிடத்து தொடர்புடைய நாடுகளில் கடல்சார் எல்லைகளைக் கவனத்தில்கொண்டு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. எல்லைதாண்டிய மீன்பிடி என்பது அடிக்கடி இடம்பெறும் ஒரு சம்பவமாகும்.

"சிறிலங்காவினைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அதுபோலவே இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்காவின் கடற்பிராந்தியத்திலும் பங்களாதேஸ் மீனவர்கள் மியன்மார் கடற்பிராந்தியத்திலும் நுழைந்து எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். ஐ.நாவின் கடல்சார் சட்டத்தின் 73 மற்றும் 145வது சரத்துக்களின் அடிப்படையில் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு குற்றமாகும்" எனச் சூரியநாராயணன் தொடர்ந்தார்.

அனைத்துலக சட்ட ஆணையத்தின் படி, அயல் நாடுகளின் கடற்பிராந்தியத்திற்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட முனைவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடாத்தக்கூடாது என இந்த ஆணையகம் கூறுகிறது.

சரி குறிப்பிட்டதொரு மீனவர் படுகாயமடைந்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் அதற்கான நட்டஈட்டினை எந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் என்பதில் எந்தவிதமான தெளிவான பதிலும் இல்லை. "கரையோரச் சமூகங்களின் மத்தியில் அளவில் பெரிய வாக்கு வங்கிகள் இருக்கின்றபோதும் அரசியல் வாதிகள் உருப்படியான காரியங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை" என மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கற்கைகள் என்பதற்கான அமைப்பின் தலைவர் வாசன் கூறுகிறார்.

குறிப்பிட்டதொரு தேர்தலின் முடிவையே மாற்றக்கூடிய 37 தேர்தல் தொகுதிகள் கரையோர மீனவர் சமூகத்தினைக் கொண்டது. ஆனால் சரஸ்வதி போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமைதான் என்ன?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

Wednesday, February 2, 2011

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து.
இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்).
எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.
டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.
அதிலும் குறிப்பாக இப்போது டிவிட்டரில் கை வைக்கின்றனர்.
டிவிட்டர் செய்திகள் மூலம் போராட்டத்திற்கு தூண்டுகோளாக இருக்ககூடிய‌ தகவல்கள பகிர்ந்து கொள்ளப்பட்டு பரஸ்பர ஆதரவு திரட்டப்படுகிற‌து.வெகுஜன ஊடகங்கள் தனிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் செய்திகளை சீர் தூக்கி பார்த்து வெளியிடும் நிலையில் இணையவாசிகள் எந்தவித அச்சமோ தய‌க்கமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு திரட்ட டிவிட்டரும் பேஸ்புக்கும் கை கொடுக்கின்றன.
எனவே தான் செஞ்சீனமும் சரி மதாடிப்படைவாத ஈரானும் சரி மக்கள் அதிருப்தியை எதிர் கொள்ளும் போது டிவிட்டர் நதியின் மூலம் எதிர்ப்பு தகவல்கள் பாய்ந்தோடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கின்றன.
இப்போது எகிப்திலும் இது தான் நடந்திருக்கிறது.
உண்மையில் எந்த ஒரு நாட்டில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு நிலைமை சரியில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு டிவிட்டர் மக்கள் சாதனமாக உருவாகியுள்ளது.
வர்த்தக நிறுவனமாக இருந்த போதிலும் டிவிட்டர் நிர்வாகம் இதனை உணர்ந்திருப்பது நல்ல விஷ‌யம்.அதைவிட இந்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள‌ அறிக்கை வரவேற்கத்தக்கது.
டிவிட்டர் நதி பாய்ந்தோடட்டும் என்னும் தலைப்பிலான பதிவில் டிவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்,தங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் எந்த இடத்தில் இருப்பவரும் உடனடியாக தொடர்பு கொள்ள வழி செய்வதே டிவிட்டரின் நோக்கம் என்றும் இதற்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சில டிவிட்டர் செய்திகள் அடுக்குமுறை தேசங்களில் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர வல்லவை என்றும் கூறியுள்ள ஸ்டோன் டிவிட்டரின் உள்ளடக்கத்தில் உடன்பாடு  இல்லாவிட்டாலும் கூட அந்த தகவல்கள் பாய்ந்தோட செய்து வருவதாக கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை அடிப்படை ம‌னித‌ உரிமை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோன் எந்த கருத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
டிவிடரின் தணிக்கை கொள்கை பற்றியும் விரிவாக விளக்கியுள்ள ஸ்டோன் கருத்து சுதந்திரம் தொடர்பான டிவிட்டரின் கருத்துக்களை பின்தொடர்வதற்கான முகவரியையும் கொடுத்துள்ளார்.
டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக உருவாகியுள்ள நிலையில் டிவிட்டரின் இந்த தன்னிலை விளக்கம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான ஆதரவு வரவேற்கத்தக்கதது.
சில ஆண்டுகளுக்கு முன் ஈரானில் எதிர்ப்பு அலை எழுந்த போது டிவிட்டரே அதன் மையமாக விளங்கியது.அப்போது டிவிட்ட தளத்தின் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த‌து.இந்த நேரத்தில் டிவிட்ட மூடப்பட்டால் போராட்டக்காரகளின் குரல் கேட்காமல் போய் விடும் என் க‌ருதி அமெரிக்க அரசே டிவிட்டரிடம் பராமரிப்பு பணிகளை தள்ளிவைக்க கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.
———-
http://blog.twitter.com/2011/01/tweets-must-flow.htm
———-
(தமிழக மீனவர்களுக்கான டிவிட்டர் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்)


 cybersimman

மீனவர் மீது தாக்குதல் - நண்பர்களுக்கு மின்னஞ்சல்

வணக்கம் ,

கடந்த 30 ஆண்டுகளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடலுக்குப் போகும் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் வழக்கமாகிப் போயிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குப் போக பயப்படும் படியான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 539 மீனவர்கள் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. ஜனவரி 2011ல் மட்டும் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியல் சூழலில் இந்த வாழ்வாதார பிரச்சனை தீர்வு காணப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களை எதிர்த்தும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நாடியும் இணைய சமூகங்களில் ஆர்வலர்கள் விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள். உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களைப் போல, இந்தப் போராட்டமும் நிகழ் உலகுக்கும் பரவி துன்புறுத்தப்படும் மீனவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வேறு ஆதரவற்ற எளிய மீனவ மக்களுக்காக உங்கள் குரலையும் எழுப்புங்கள். #tnfisherman என்ற குறிச்சொல்லுடன் டுவிட்டரில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் செய்தியை பரவச் செய்யுங்கள். உங்கள் சில நிமிடங்கள் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அருமருந்தாக அமையலாம்.

மேல் விபரங்களுக்கு http://www.tnfisherman.org/

அன்புடன்,


மா சிவகுமார்

மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள்

மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள்! #tnfisherman
டிவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த தோழர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்! தமிழக மீனவர்கள் செத்தால் ரெண்டு நாளைக்கு மேல எவனும் கண்டுக்க மாட்டான் என்ற வாதத்தை பொய்யாக்கிய இணைய தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு லட்சத்து எழுபதாயிரத்து ஆறாயிரம் கோடி.
டிவிட்டரில் தமிழன்பன் : http://twitter.com/#!/tamizhanban08

டிவிட்டரில் எழுதுவதால் மீனவர்பிரச்சனை தீர்ந்துவிடுமா என்கிறார்கள் டிவிட்டரில்கூட எதிர்க்க துணிவில்லாதவர்களோடு நமக்கென்ன பேச்சு#tnfisherman
மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள் போல்தெரிகிறது எவனுக்கும் வார்த்தையே வரமாட்டேங்குதே! #tnfisherman
தமிழன் அமைச்சனானா எங்க பிரச்சனை பேசுவீங்கன்னு பார்த்தா நீரா ராடியாகிட்ட என்னென்னமோ பெசிறிக்கீங்க எங்கள பத்தி பேசலையே #tnfisherman
மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்றார் கருணா. வாயிற்றுபிழைப்பிற்கு வாழ்வோடு போராடும் அவன் எங்கே? தமிழகத்தையேவளைத்த நீ எங்கே?#tnfisherman
தேர்தல் வரைக்கும் மீன்பிடிக்கிறத தடுக்க போறியா? இல்ல சிங்களன்கிட்ட சொல்லி தேர்தல்வரை தற்காலிகமா சுடுறத நிறுத்தபோறியா? #tnfisherman
இத்தாலியில் இருந்து தலைவியை இறக்குமதி செய்தவர்கள் தலைவனை இலங்கையில் தேடினால் என்ன ஆச்சரியம்? #tnfisherman
போன்ல பேசினா ஒட்டுகேக்குரான்னு நிருபமாவ அனுப்பி வைச்சிருக்க. உண்மையை சொல்லு ஒரு தமிழன் தலைக்கு விலை என்ன? #tnfisherman
கச்சீவு தாரைவார்க்கப்பட்ட பொழுதும் நீ கடிதம்தான் எழுதினாய் காலம் கடத்துவதை தவிர்த்து உனது கடிதம் என்ன சாதித்து விட்டது #tnfisherman
மீனவனை அம்மணமாக்கி அடிக்கிறான் உங்களுக்கு என்னடா இனமானத்தலைவன் என்று பட்டம்? #tnfisherman
மும்பை குண்டுவெடிப்பை குப்பனும் சுப்பவுனும் கண்டிக்கவில்லை என்கிறார் ஒலக நாயகன் #tnfisherman
தமிழக காங்கிரஸ் தலைவர்களே உங்களுக்கு தமிழர்களை நினைவில் இருக்கிறதா? நீங்கள்தான் காமராசர் ஆட்சி அமைக்க போறீங்களா? தூ… #tnfisherman
ஆரியர்களை டெல்லி வரை துரத்தி சென்ற தானைதலைவன் வாழ்க வாழ்க!
-இனமானத்தலைவர் குஞ்சுமணி மன்னிக்க வீரமணி #tnfisherman
தமிழ்நாட்டில் சிறுத்தை தலைவர் கொஞ்ச நாளாய் மியாவ் மியாவ் என்றார் இப்பெல்லாம் லொள் லொள் என்றாகிவிட்டார் #tnfisherman
ஒருவேளை தென் அமெரிக்க மீனவன் சுடப்பட்டு இருந்தால் @CharuNivedita குரல் கொடுத்து இருப்பாரோ? #TNfisherman
நிருபமா ராசபக்சேவிடம் மீனவனை ஏன் கொன்றாய் என்று கேட்பாரா? அல்லது நலம் நலம் அறிய ஆவல் என்பாரா?#tnfisherman
என்னுடைய மீனவனை ஏன் சுட்டாய் என்று கேட்க துப்பில்லாத இந்தியா வளரும் வல்லரசாம். போங்க பாஸ் நீங்க ரெம்ப காமெடி #tnfisherman
இராசதந்திரத்தில் கருணா 23 ஆம் புலிகேசியை மிஞ்சிவிட்டார் பாருங்கள். காலுக்கு விழ டெல்லிக்கு போகனுமா? #tnfisherman
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இலங்கையோடு இணைந்தே இன்னும் பல மீனவர்களை கொல்வோம் #tnfisherman
“இப்படியே போ கடல்ல உங்கப்பன் நண்டு வறுத்து தின்னுட்டு இருப்பான்”னு கவுண்ட மணி சொன்னது இந்திய கப்பல்படையை தானா? #tnfisherman
கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் மீனவர்களே கருணா டெல்லியில் தன் குடும்பத்திற்கு போக உங்களுக்கு ஏதாவது வாங்கி வருவார் #tnfisherman
ஜனவரி23 ல கொல்லப்பட்ட மீனவனுக்கு பிப்ரவரி 6 ல உண்ணாவிரதம் உங்களுக்கு என்ன பிரச்சனை வைகோ? #tnfisherman
கருணாநிதிக்கு நீங்கள் ஏன் சிங்கள ரத்னா குடுக்ககூடாது ராசபக்சே ? உங்க நாட்டுல எவன்உங்களுக்காக இவரைவிட அதிகம் ஆணி பிடிங்கிட்டான்? #tnfisherman
என்ன தலைவா? உன் மக சங்கமம் நடத்த ஒரு கோடி எங்க மீனவன் சங்கருந்தா ஐந்து லட்சமா? எப்பவுமே உன் குடும்பத்துக்கு தனி கணக்கா? #tnfisherman
நூத்திபத்து கோடி பேரில் ஒரு தலைமை இல்லாமல் தலைமையை வாடகைக்கு எடுப்பவர்களிடம் நாம் என்னத்தை எதிர்பார்க்க?#tnfisherman
தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் போட்டாலும் உங்களை சிங்கள கப்பல்படையிடம் காட்டிகொடுத்துவிட்டுத்தான் சாவேன்! #tnfisherman
எருமை கூட தமிழர்களிடம் பொறுமை கற்கும் #Tnfisherman
தலைவா நீ சங்கத்தமிழில் நடிக்கும் பொழுது உன் சங்கையே கடிக்கும் ஆவேசம் பிறக்கிறதே என்ன செய்ய? #tnfisherman
ஐந்துமுறை ஆண்டதுக்கே #tnfishermanஐநூறு பேர முழுங்கிட்ட இன்னொரு முறையா? தமிழினம் தாங்காதுடா யப்பா!  (சந்திரமுகி நாசர் மாதிரி வாசிக்க)
இது என்னடா இந்திய இறையாண்மை? காஸ்மீருக்கு ஒரு பார்வை கச்சத்தீவுக்கு ஒரு பார்வை ?#tnfisherman
யாரவது சுபவீக்கு மேடைபோட்டு தாருங்கள் அப்புறம் எப்படி கூவுறார் என்று பாருங்கள் #tnfisherman

தமிழன்பன்

மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

*
கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா? 

தமிழக மீனவர்களைக் காக்க நடக்கும் இந்த நல்லதொரு விஷயத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம். கீழிருப்பதை மின்னஞ்சல் மூலமாக அனைவருக்கும் அனுப்பவும். உங்கள் பதிவில் மறுபதிப்பும் செய்யலாம்.


Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail
Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011 ,  Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy -http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#%21/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman - http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for http://www.savetnfisherman.org%20/

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com,tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

நன்றி

மகேஷ் : ரசிகன்

Tuesday, February 1, 2011

மீனவர் துயரம் தீயாக பரவியது

 


இலவச வேட்டியை கட்டி கலர் டிவி பார்க்கும் தமிழனுக்கு கடலில் செத்து மிதக்கும் தமிழனை பற்றி கவலை இருக்காது
என நினைத்த தமிழரசுக்கும் இந்திய அரசுக்கும் இணைய தோழர்கள் ஆப்பு வைத்து வருகிறார்கள்.
நூற்று கணக்கான டிவிட்டுகளால் குத்தி வருகிறார்கள் இந்தியா எனும் ஆனைக்கு டிவிட் எனும் அங்குசம் சின்னதுதான்
இருந்தாலும் அது நேராக குத்தவேண்டிய இடத்தில் குத்துகிறது .

வழக்கமாக மொக்கை, சில பொழுதுபோக்கு எழுத்தாளர்களை பற்றிய சண்டை சில கவிதைகள் சில முற்போக்கு கட்டுரைகள் சில வசவுகள் என மிதக்கும் இந்த வெளி இப்போது போர்குரலுடன் திமிரி எழுகிறது .

தேர்தல் என்பது கந்துடைப்பு அதற்கு இலவசம் என்பது ஏமாற்று என்பது சாதாரணமக்களுக்கே புரிந்துவிட்ட நிலையில் இணைய வாசிப்பாளர்கள்
அடுத்த கட்டமாக மத்திய மாநில அனைத்து ஓட்டு கட்சி அரசியல் வாதிகளையும்
டிவிட்டரில் தோலுரிக்கிறார்கள்

மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போவதுதான் பிரச்சனை என யாரும் சொல்லமுடியாது ஏனெனில் இந்தியாவின் கடல் எல்லை எது இலங்கையின் கடல் எல்லை எதுவென்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறது போதும்

மீனவர்கள்  எல்லைகளை கடந்தவர்கள் என்கிற நமது வாதம் வருகிறது

மொத்தத்தின் இந்த மீனவர் பிரச்சனை என்பது ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்து தனியாக பார்க்க முடியாது

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுதமிழர்கள் கொல்லப்படும்போது போர்குரல் எழுப்பனும்


இணையத்தில் பற்றவைக்கப்பட்டுள்ளது ஒரு புரட்சி தீ நிச்சயமாகவே அதை அணையாமல் கொண்டு செல்ல வேண்டும்

நிறைய நண்பர்கள் மீனவர் பிரச்சனை குறித்த கட்டுரைகளை தேடி படித்து கீச்சுகிறார்கள்
இது ஒரு விசயத்தின் மீது முன்பிருந்த அசட்டையான மனப்பான்மையை போக்குகிறது
மேலும் நடைமுறை விசயத்தின் தீவிரத்தை விடுத்து கதை கவிதை எனும் கற்பனை குதிரைகளை தற்காலிகமாகவேணும் நிருத்தி வைக்கிறது .

சாதி , இன , வர்க்க வேறுபாடின்றி நாமனைவரும் மீனவ நண்பனுக்காக ஒன்று சேர்கிறோம் என்பதே ஒரு பெரிய புரட்சிதான்

புரச்சியை ஆகாத விசயமாக அதை புர்ச்சி என கேலி செய்தவர்கள் தமிழக மீனவர்களுக்காக நடக்கும் புரட்சியை கண்டுகொள்ளட்டும்

மறுபுறம் நாங்கள் களத்தில் இருக்கிறோம் நீங்கள் மத்தியதரவர்க்கம் இணையத்தில் சும்மா வாள் சுழற்றுகிறீர்கள் என சொன்ன போலி முற்போக்குவாதிகளே இது புரட்சிகரமானது என
சொல்ல வைத்து இருக்கிறது

இணையமோ மற்றெவ் ஊடகமோ அதனளவில் பிற்போக்குதனமில்லாதவை
அதை உபயோக்கிறவனவே அதை தீர்மானிக்கிறான் என்பதை இந்த நபர்கள் இப்போதாவது புரிந்து கொண்டமைக்கு நன்றி

மனிதன் மிக கொடூரமாக ஒடுக்கப்படும்போது புரட்சி வரும் என்பதை இது காட்டுகிறது

பிரச்சனையை விரிவாக அறிய  சொடுக்கவும்

http://inioru.com/?p=16420
--
தியாகு