Tuesday, February 1, 2011

ஏன் இந்த கொலை வெறி # tnfisherman

பதிவுலகெங்கிலும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது எதிர்ப்பு தீ தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு எதிராக. நான் ஒரு இலங்கையன் என்றாலும் சாதாரன உணாச்சியுள்ள மனிதனாக, பதிவுலகில் அங்கத்தவனாக, தமிழ் பேசுவனாக இந்தப்பதிவு. தீப்பிழம்பாக இல்லாவிட்டாலும் சிறு தீக்குச்சியாகவேனும் பயன்படட்டும். சிறு தீக்குச்சியும் பல பெரிய தீப்பிழம்புகளை பிரசவிக்கும் என்ற நம்பிக்கையில்.


இது இன்று நேற்று செய்திகளில் வரும் விடயமல்ல எப்போயிருந்தோ வந்துகொண்டேயிருக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என்ற செய்தி. ஏன் இந்த மனித உயிர்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது. இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்திருந்தாலும் கூட அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடிக்கலாமே தவிர சுட்டுத்தள்ளுவதற்கு என்ன அதிகாரமிருக்கிறது இலங்கை கடற்படைக்கு யார் கொடுத்தார் அந்த அதிகாரத்தை அவர்களுக்கு. இதைத்தவிர சில பதிவுகள் கொல்லச்சொல்வது இந்திய அரசுதான் என்கிறது யார் சொல்வார் உண்மையை.


உலகில் மனித உயிர்களின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மிருகங்களுக்கு காட்டப்படும் அனுதாபம் கூட மனித உயிர்களுக்கு காட்டப்படுவதில்லை. யாராக இருந்தாலும் மனிதன் தானே அவன் உயிர் இருக்கும் வரையில்தானே அவன் வாழ்க்கை. அவனுக்கும் ஒரு குடும்பம் பிள்ளைகள் இருக்கும்தானே என்ற மனிதநேயம் மரித்துப்போய்விட்டதோ.. விலை மதிக்க முடியா மனித உயிர்கள் இப்பொழுதெல்லாம் சில்லறைத்தனமாக பறிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவற்றையெல்லாம் நோக்கும் போது மனிதனுக்கு ஆறறிவுதானா என்ற சந்தேகம் எழுகிறது.ஐந்தறிவுகொண்ட எந்த மிருகமும் தன் இனத்தை தானே கொல்லும் இழி செயலை செய்வதில்லையே..


தன் வயிற்றுப்பிழைப்புக்காக கடலுக்கு மீன்பிடிக்கச்செல்பவன் தன் உயிர்தொலைத்து கரைதிரும்புவது கொடுமையிலும் கொடுமைதான். இந்தக்கொலைகளை செய்பவர்கள், செய்ய தூண்டுபவர்கள், ஆதரவளிப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்களே அது யாராக இருந்தாலும் சரி. எதிரொலிகள் எட்டுதிசையிலும் ஒலிக்கட்டும். இனிமேலாவது நிறுத்தப்படட்டும் இந்த கொலை வெறி உயிர் பறிக்கும் தாக்குதல்கள்..

Riyas

No comments:

Post a Comment