Showing posts with label #tnfishermen. Show all posts
Showing posts with label #tnfishermen. Show all posts

Saturday, January 29, 2011

மீனோடு மீனாக..

நாளோ ., வாரமோ

மீன் தேடி தனியாய்
தூண்டில் வலையும்
சுக்கானும் பிடித்து..


மோட்டாரில் சென்றாலும்
மீன்தான்.. பிடிக்கிறோம்


வரைந்து வைக்கா
எல்லைகோட்டை
தாண்டினோமா
வழி தப்பினோமா


கடலும் குடிசையும்
கரைகாணா சொத்து


அலைகளாய்..
திரும்ப திரும்ப..
கரையேறத் தவித்து
முடியாமல் மூழ்கி..


மனிதர்தானா நாங்களும்
மதிப்பிருக்கா எங்கள் உயிர்க்கும்..


மீன் சுட்டோம்
உங்கள் உணவுக்காய்..
மீனோடு மீனாய் சுடப்படவா
மீண்டும் பிறந்தோம்


தமிழன்தான் நாங்களும்
தமிழர்களே கரம்கோர்ப்பீர்.


குறிப்பு..:-இந்த மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு..
1364 வதாக கையெழுத்திட்ட நபர் நான்.. நீங்களும் இணைந்து குரல் கொடுங்கள்.. நன்றி ராமலெக்ஷ்மி.


பதிவர்: தேனம்மை லெஷ்மணன்