Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Sunday, January 30, 2011

மீன் இனம் இருக்கும் எம் மீனவர் இனம்?

ஏய்த்து பிழைப்பவருமல்ல....
எத்தருமல்ல....
சோம்பி திரிபவர் அல்ல - அவர்
சொர்கம் வேண்டி அழுபவருமல்ல
அன்றாடம் காய்ச்சி அவர்
அண்டிப்பிழைப்பவரல்ல
மண்டியிட்டு தொழுத தெய்வமும்
மார்பில் அடித்து அழச் செய்வதேனோ?

கோடியை சேர்க்க போகிறாரா?
கொள்ளையடிக்கத் தான் போகிறாரா?
சிங்கள கொடுங்கோலனே!!!
ஒரு இனத்தை அழித்து பருகியபின்னும்
பசியாறலையா உன் இரத்த தாகம்..

அரசியல் ஆடுகளத்தில்
அப்பாவிகள் பலிகடாக்கள்
எத்தனை தாலிகளை அறுக்கனும்
எத்தனை தூளிப்பிள்ளைகள்
அப்பனை பார்க்காமல் அழனும்
தூண்டில் போட போனவன்
துடிப்பு பிடித்த பாவத்துக்கு
பாவி அவனிடம் பலியாகி
பாடை ஏறும் அவலம் என்ன?

ஏழை உயிர் பொருட்டில்லையா?
அரசுக்கு அதன் மேல் பொருப்பில்லையா?
லட்சம் கோடிகள் கேட்கவில்லை
அவர்கள் லட்சியம் கோடி
கொண்டவருமில்லை...
மீன் இனம் இருக்கும்
எம் மீனவ்ர் இனம்?

கேட்பாரில்லை என்ற எண்ணம்
அரசுக்கா? அந்த அரக்கனுக்கா?
சிந்திச் செல்லும் ரத்த துளிகள்
விழுதுகள் அல்ல விதை மணிகள்
விழித்துக் கொண்டும் தூங்காதே அரசே
எல்லோரும் மண்ணின் மைந்தர்களே !!!


தமிழரசி