Saturday, January 29, 2011

tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்?

இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்.. அவன் கடலுக்கு போறான் நான் தரையில் இருக்கேன்... அவனுக்கும் எனக்கு என்ன சம்பந்தம்??

பொதுவா மீனவ கிராமங்களுக்குள்ள எப்பயும் சண்டை வேறு நடக்கும்... இதனால் ஈசிஆர்ல எப்ப வேனா சாலைமறியல் நடக்கும்... உடனே பதட்டத்தை தணிக்க இரண்டு போலிஸ் ஜீப் நிக்க வச்சி, காவலுக்கு பத்து போலிஸ்காரவுங்க பிளாஸ்ட்டிக் சேர்ல உட்கார்ந்துகிட்டு வறுத்த மீன் சாப்பிட்டு விட்டு மீன் முள் தொண்டையில சிக்கிக்குகிச்சு என்ன செய்யலாம்? என்று பொம்பளை போலிசிடம் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்...

இப்போதும் சண்டை போட்டுகொள்ளும் மீனவ கிராமங்கள் அதிகம் இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கரை தள்ளி இருக்கும் பொதுமக்கள் புலம்பியது உண்டு...
இன்னும் படித்தவர்கள் இதை பற்றி எந்த கேள்வியும்  எழுப்பியது இல்லை...
 நான்காம் கட்ட ஈழப்போர் முடிந்து கொஞ்சநாளில் ஒரு தமிழக மீனவன் சுடப்பட்டு இறந்து போது, அது தினத்தந்தியின் நன்காம் பத்தி செய்தியாக கணக்கில் எடுத்துக்கொள்ளபட்டது...


ஆனால் நான் அது பற்றி அப்போதே எழுதினேன்..அதன் பிறகு எப்போதும் பயன்படும்வகையில் எப்படியும் அடுத்த மாதம் சாகப்போகும்  தமிழக மீனவனுக்கு ஒரு கடிதம் என்று எழுதினேன்... அது எப்போதும் பொறுந்தும் என்பதால் எப்போது எல்லாம் மீனவன் இறக்கின்றானோ அப்போது எல்லாம் அந்த கடிதத்தை எனது பதிவில் மீள் பதிவு போடுவேன்...

நேற்று காலையிலேயே நண்பர் கும்மி சுகுமார் சுவாமிநாதன் நம்பர் வேனும் என்று போன்  செய்ய, ஏன் என்று கேட்டேன்?  டுவீட்டரில்தமிழக மீனவனுக்கு ஆதரவாக வரும் டுவிட்டை தனிப்பக்கத்தில் வர வேண்டும் ,அது பொதுமக்களுக்களிடத்தில் போய் சேர வேண்டும் அதுக்குதான் என்று சொன்னார்.

ஆனால் இந்த முறை நான் எதிர்பார்க்கவே இல்லை ஒரு உலக படம் எழுதிவிட்டு டுவிட்டரில்இணைக்க போனால் இருபது செகன்டுக்கு 30 டுவீட்டர் பிஷர் மேன் பற்றி வந்து கொண்டு இருந்தது... எனக்கு செம ஆச்சர்யம்... எப்படி இந்த எழுச்சி என்று யோசித்துகொண்டு இருந்தேன்..

அதில் எனக்கு ரொம்பவும் பிடித்த டுவிட் கீழே... நண்பர் பெயர் ஞாபகம் இல்லை..
வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்...இலங்கைகடற்படை
பார்த்தார்கள், ரசித்தார்கள், சென்றார்கள்.இந்திய கடற்படையினர்
================
 சரி இந்த திடிர் எழுச்சிக்கு காரணம் என்ன??காரணம் ரொம்ப சிம்பிள்....

 தேர்தல் வரும் நேரத்தில் இந்த இரண்டு திராவிடக்கட்சிகளும் அடித்த அரசியல் ஸ்டன்ட்...

திமுக அதிமுக இரண்டு பேருக்கும் இதில் அதிக பொறுப்பு இருக்கின்றது. அதனால் அவர்கள் மேல் வரும் இயல்பான  கோபம்...

 மத்திய அரசு ஒரு வடநாட்டுகாரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு தென்னிந்தியனுக்கு முக்கியமாக தமிழனுக்கு எப்போதுமே கிடைப்பதில்லை என்ற படித்த மற்றும் பாமரனின்  ஆதங்கம்...


குடியரசு தினத்துக்கு பக்கத்தில் நடந்த இந்த மீனவ தாக்குதல் பெரிய வல்லரசு என மார்த்ட்டிக்கொள்ளும் இந்தியாவின் குடிமகனை ஒரு சின்ன தீவை சேர்ந்த கடற்படை500 பேருக்கு மேல் கொன்று குவித்து இருக்கின்றது... ஆனால் இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் படித்தவனை உசுப்பி விட்டு விட்டது....

சட்டென ஆளும் கட்சி இறந்த மீனவ குடும்பத்துக்கு 5லட்சம், அரசு வேலை என்று சொல்லி அவசரமாக வாயடைக்க முயன்றதும்,தேர்தலின் போது தலைகாட்டும எதிர்கட்சி தலைவர் சட்டென இறந்த மீனவ குடும்பத்துக்கு நேரில் போய் ஒரு லட்சம் கொடுத்து விட்டு ஆறுதல்   சொன்னது இன்னும் சில மாதங்களில் வரப்போகும் தேர்தலுக்கான ஸ்டன்ட் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது..போன வருடம் இறந்த மீனவகுடும்பத்துக்கு ஜெ ஏன் நேரில் செல்லவில்லை...??


என்னதான் ஜெ ஆட்சியில் 30 என் ஆட்சியில் 17 என்று கணக்கை கலைஞர் சொன்னாலும்   யார் ருலிங் பார்ட்டியில் இருந்தாலும் அவர்களைதான் கேள்வி கேட்பார்கள் பொதுமக்கள்..

தமிழின தலைவர் என்று தன்னை சொல்லிக்கொள்ளுபவர் என்பதால் கலைஞர் மீதுதான் குற்றசாட்டு அதிகம் வைக்கபடும்...

எல்லாத்தை விட இந்த விஷயத்தில் திமுக்காகாரர்களே எரிச்சல் அடையும் விஷயம் என்னவென்றால்
கலைஞர் டிவியில் அடிக்கடி ஒளிப்பரப்பாகும் புரோமோ... விளம்பரம்
தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரம் போல இருப்பேன் அதில் ஏறி பயணம் செய்யலாம் கவிந்து விடமாட்டேன் என்று அடிக்கடி ஒடி புரோமோ.... பார்க்கும் போதே எரிச்சல் வருகின்றது..

தமிழ் உணர்வாளர்கள் இந்தமுறை காங்கிரஸ் தொற்க்கவேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றார்கள். அதுவும் இந்த எழுச்சிக்கு காரணம்...

சரி இந்த எழுச்சியால் என்ன செய்து  விட முடியும்??? ஒர மயிறும் கிழிக்க முடியாது என்று சிலர் நினைக்கலாம்...முதலில் வெகு ஜனமக்களிடத்தில் இந்த செய்தி போய்க்கொண்டு இருக்கின்றது.. யோசித்து பார்க்க வைக்கின்றது...எதுவுமே செய்யாமல் இருப்பதை விட எதாயாவது செய்ய  வேண்டும் என்பது எனது பாலிசி... அந்த வகையில் இந்த எழுச்சியை கொண்டாட வேண்டியதுதான்...

தம்பி குசும்பன் ஒரு முறை என்னிடத்தில், அண்ணே தமிழக மீனவ தாக்குதலை தொடர்ந்து எழுதிகிட்டு வருவது நீங்கதான் அண்ணே என்று சொல்லி இருக்கின்றார்.. அதே போல  போனவருடத்தில்  எழுதிய மீனவ கடிதத்துக்கு மீனவ சமுதாயத்தில் இருந்து நண்பர் இருதயராஜ் போன் செய்து எங்க மக்களோடு பிரச்சனையே நாலு பேருக்கு தெரிவிக்க எழுதிய எனக்கு நன்றி தெரிவித்தார்... இந்த சம்பவத்தை பத்தியாருமே கவலைபடலை என்று பெரிய வருத்தம் பிளாக் உலகத்தில் என்று வருத்தப்பட்டார்....

இப்போது அது பல்கிபெருகி இருப்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது...

மீனவன் வேறு நாங்கள் வேறு என்று எண்ணத்தில் இருந்தவர்கள்... படித்தவன் பாமரன் என்ற எண்ணத்தில் இருந்தவர்களை இந்த எழுச்சியானது தமிழக மீனவன், இந்தியன் என்று ஒரு நேர்க்கொட்டில் படித்தவன் படிக்காதவன் என்று பிரித்து பார்க்காமல் பயணபடவைக்கின்றது....மிக்க சந்தோஷம்...



இந்த விஷயத்துக்கு தீர்வு கிடைக்கும் இல்லை என்பது இரண்டாவது விஷயம்.. ஏதோ நிருபமாவை பிளைட் ஏறவாவது வைத்தோமே என்று தோள் தட்டிக்கொள்ளவேண்டியதுதான்..

இல்லைசார் நீங்க எழுச்சி அடைந்தாலும் அடையாவிட்டாலும் அவுங்க போய் இருப்பாங்க என்று சொன்னால் அதை என்னால் ஏத்துக்கொள்ள முடியாது காரணம் குறைந்த பட்ச கண்டன அறிக்கை கூட கொடுத்தது இல்லை..... இப்பதான் பேச அனுப்பி வைக்குது...இதையும் மீறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அடுத்த முறை பொது மக்கள் பொங்கி விடுவார்கள் என்று நினைக்கின்றேன்... பார்ப்போம்.

ஆளும்கட்சி கடவுளை வேண்டிக்கொள்வது என்னவென்றால் தேர்தல்வரையிலாவது இலங்கைகாரன் எந்த தாக்குதலையும் தமிழக மீனவன் மேல நடத்திட கூடாதுன்னு நினைக்கிறதுதான்..இப்போதைய தமிழக நிலைமை...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

ப‌திவ‌ர்:  ஜாக்கிசேகர்

No comments:

Post a Comment