Sunday, January 30, 2011

தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

சிங்கள கடற்ப்படையால் கடந்த பத்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு மீனவர்கர் காட்டு மிராண்டித்தனமாக கொள்ளப்பட்டுள்ள செய்தி நிச்சயம் தமிழ் இன உணர்வாளர்களுக்கு பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது...

ஆனால் இதுவரை சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மீனவமக்கள் சிங்கள படையினரால் கொல்லப்பட்டபோதும் ஒவ்வொவொரு மீனவன் கொல்லப்படும்போதும் இரண்டு அறிக்கைகள் இரண்டு கண்டனங்
கலோடும்,தமிழின தலைவரின் ஒரு டெல்லி தந்தியோடும்,அற்பமான நிவாரனத்தொகையோடும் அந்த நிகழ்வுகளை அவ்வாறே மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்க சென்ற எம் சுயமரியாதை தமிழ் மக்கள் இம்முறை அது நிகழாது தம் இனம் காக்க எதையாவது நகர்த்திபோடுவர் என நம்புவோமாக......


ஆஸ்த்ரேலியாவில் மேட்டுகுடிமக்கள் தாக்கப்படும்போது ஓடி ஓடி கதறி அழுத வடஇந்திய செய்திசேனல்கள் எம் ஏழை மீனவனின் கண்ணீர் கதையை இதுவரை காட்டமறுப்பது ஏனோ??? அவன் ஏழை என்பதாலா?அல்லது தமிழன் என்பவன் கேனயன் என்பதாலா????


வட இந்திய சேனல்களை நொந்து என்ன பயன்???? முத்தமிழை வளர்ப்பதையே முதர்த்தொழிலாக கொண்டு இயங்கும் நம் தமிழ் தொலைக்காட்சிகள் மானம் அற்ற நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை நோட்டமிட்டு வயிறு வளர்க்கும் சேனல்கள் வயிற்றுப்பிழைப்புக்காக உயிர் பணயம் வைத்து கடல் கடந்து சென்று சுட்டு கொல்லப்படும் மீனவனின் இனமானம் இழந்து வாடும் துயர வாழ்வு கண்ணில் தெரியுமா சொல்லுங்கள்...


நான்கரையாண்டுகள் கொடநாட்டில் தூங்கி விழித்து தேர்தல் வர இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எம் மீனவ ஏழை குடிகள் நினைவில் வர ஓடோடி வந்து மீனவனின் இறுதி சடங்குக்கு சென்று ஆறுதல் சொல்லும் எங்கள் இனமானமுள்ள தன்மான தலைவியை பாராட்ட வார்த்தைகள் உண்டோ.அறிக்கைப்போர் நடத்தும் வீராங்கனையே எதிர்க்கட்சி தலைவியான உன்னால் இந்த ஐந்தாண்டுகள் தாய் தமிழகம் அடைந்த நன்மைகளுக்கு அளவுண்டோ..ஈழப்போரின் இழப்புகளை இதெல்லாம் சாதரணமப்பா என நியாயப்படுத்தியவர் இப்போது வீறுகொண்டு எழுவது எதனால் தமிழன் நியாபகமறதிக்காரன் என்பதலா????


திராவிட இயக்கத்தின் தலைவனே, தன்மான தங்கமே,சுயமரியாதை சிங்கமே, கருப்பு சட்டையின் கரம்பிடித்து வளர்ந்த கண்ணாடிபோட்ட கார்ல் மார்க்சே, பாராட்டு விழாக்களிலே காலத்தை தள்ளும் பாருடை வேந்தே,நீ செய்த காரியங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் காலம் உள்ளவரை மறவாது என் கண்மணியே...

ஈழப்போரை ஒருமணி நேர உண்ணா நோன்பில் முடிவுக்கு கொண்டுவந்த எங்கள் தலைவா,ஈழத்தமிழனுக்காக ஒருமணி நேரம் நடித்தவர் சாரி துடித்தவர் மீனவ பெரும் குடிகளுக்காக ஒரு கால் மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ராஜபக்சேவின் நாஜிப்படையை விரட்டி அடிப்பாரடா கலங்காதே என் உடன்பிறப்பே,,

அல்லது டெல்லிக்கு ஒரு கடிதம் போட்டு 2016 ஆம் ஆண்டுக்குள் களங்கம் தீர்ப்பார் பொருத்துக்கொல்லடா என் பொன்மணியே.

அல்லது தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் காவடிஎடுப்பேன் பதவிக்காக போர்ப்படை பார்த்து பதறாதே கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும் தம்பி ராஜபக்சே அப்பாவியடா மீனவனை கொல்வது ஆரிய கடல்பூதமாடா என சிரிப்பு அறிக்கையை துயரத்தில் மூழ்கிருக்கும் தமிழகம் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்....



சினிமாவுக்கு ஆங்கில தலைப்புவைத்தால் ஆப்படிப்போம் என கொக்கரித்த உயிர்மைக்காரன் எங்கே?
காஸ்மீரத்தில் கொடி நாட்டி அமைதியை கொண்டு வந்த தேசிய வியாதிகள் எங்கே?
மண்ணாங்கட்டி மத சார்பின்மை பேசும் கதர் சட்டை, கை சின்ன காரன் எங்கே?
காவிரி பிரச்சனையை காமெடி பிரச்சனையாக்கி உண்ணாவிரதம் இருந்த கலை குடும்ப கண்மணிகள் எங்கே ?
இங்குள்ள களைகளை பிடுங்காமல் வடஇந்திய அரசியல் புடுங்கிகளை நொந்து கொள்வது வீண் வேலை.ஒப்பாரும் நிக்காரும் இல்லா சுயமரியாதை கொண்ட தமிழர்களே பொறுத்து வெறுத்தது போதுமடா விழித்துகொள்..
நேற்று ஈழம் இன்று மீனவன் நாளை தமிழகம் கூட கழுத்தறுக்கப்படலாம்.இனப்பெருமை பேசி பேசி அலுக்கவில்லையா செயலில் இறங்க வேண்டிய நேரமிது.
நீ தமிழனடா, தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமில்லை தமிழ் ஒருவனுக்கு ரௌத்ரத்தையும் பழக்கும்....பழக்கிகொள்...


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.இல்லேயேல் தமிழன் என்று சொல்லடா தலைல அடிச்சி கொள்ளடா...









அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.



இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

ஐத்ருஸ்

No comments:

Post a Comment