ஜன.28,2011 இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை தமிழ் ஆர்வலர்கள் நிறுவியுள்ளனர். சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வலம்வரும் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் இணையத் தமிழர்கள் #tnfisherman-ஐ பயன்படுத்தி விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளும் இங்கே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையப் பிரசாரத்தில் கலந்துகொள்ள... http://www.savetnfisherman.org/ டிவிட்டரில் நாட.. http://twitter.com/savetnfisherman | |||||
விகடன்

No comments:
Post a Comment