Saturday, January 29, 2011

தமிழக மீனவர்களுக்கான இணையப்படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த ஆவேச குரல் அரசின் காதுகளை எட்டச்செய்ய வேண்டும்.

இந்த இணைய முயற்சியின் இன்னொரு அங்கமாக மீனவர் நலன் காப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான இணைய விண்ணப்ப படிவம் உருவாக்க‌ப‌பட்டுள்ளது.

இணைய கோரிக்கைகளை உருவாக்கி அதற்கு ஆதரவு திரட்ட வழி செய்யும் பிரபலமான பெட்டிஷன்ஸ் ஆன்லைன் தளத்தில் தமிழக் மீனவர்கள காப்பாற்றுங்கள் என்னும் படிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கு,அதாவது பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ள அந்த படிவம் இதுவரை இலங்கை கடற்படையால 539 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கும் வேதனையான உண்மையை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தோடு இந்தைய மினவர்களுக்கு இது போன்ற பிரச்ச்னை ஏற்பட்ட போது தீர்வு கண்டது போல இந்த பிரச்ச‌னைக்கும் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும் ,கடல் எல்லையை மீறினாலும் மீனவர்கள் தாக்கப்படகூடாது என்றும் இந்த படிவம் வலியுறுத்துகிற‌து.

மீனவர்களுக்காக இந்தைய கடற்படை ரோந்து சுற்ற வேண்டும் என்றும் கச்சத்தீவை மீடக் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இணையவாசிகள் கைப்பமிட்டு இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

இணைய படிவம் மூலம் குரல் எழுப்புவது என்பது இணைய போராட்டம் மற்றும் இயக்கத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.எனவே இந்த படிவத்தில் கையெழுத்திட்டு நம் ஆத‌ரவை தெரிவிப்போம்.



———–

http://www.petitiononline.com/TNfisher/petition.html



—————

(இந்த போராட்டம் பற்றி அறிய விரும்புகிற‌வர்கள் என் முந்தைய பதிவான தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரலை பார்க்கவும்.)



பதிவர்: சிம்மன்

No comments:

Post a Comment