Saturday, January 29, 2011

தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...

பதிவுலக நண்பர்கள் வாசகர் அனைவருக்கும் ஒரு தாழ்மையான் வேண்டுகோள்... மீனவ நண்பர்களின் பிரச்சினைக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்றில்லாமல் இந்த தருணத்திலாவது உணர்வுள்ள தமிழனாய் பங்கெடுத்து கொண்டு நண்பர்கள் அனைவரும் தங்களது உணர்ச்சிகளையும் மனக்குமுறல்களையும், கண்டனங்களையும் கொஞ்ச நேரம் ஒதுக்கி பதிவு செய்யுங்கள் பதிவுகள் இட முடியாவிட்டாலும் சமூக தளங்களான ட்விட்டர்களிலும் ஃபேஸ்புக்கிலும் உங்களது உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளுங்கள்


தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...

கன்னித்தமிழ் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்பொத்தி கைக்கூலியாய் நின்று
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் தமிழினத்தலைவன்..!

உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று தமிழனை நம்பவைத்து
தக்க சமயத்தில் கழுத்தறுக்கும் தமிழினத்தலைவன்..!

சொல்லி சொல்லி உனை வரலாறு ஏசும்
உன்பெயர் சொன்னாலே தமிழுக்கும் கூசும்

சொத்து குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கவில்லையா??
கத்திக்கதறிய தமிழன் மீனவனின் குரல்.....

பெளத்த நெறி படித்து சிங்கள வெறிபிடித்து தோள்கள் தினவெடுத்து
தமிழன் உயிர் குடித்து தமிழன் இனமழிக்க துடிக்கின்றான்
சிங்களவன் அங்கே

தெய்வக்குறள் படித்து பதவி வெறிபிடித்து சூது மிக வளர்த்து
பாதி தமிழகத்தை பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான்
எங்களவன் இங்கே

இத்தாலி சனியாளுக்கு தப்பாது தாளமிடும்
தமிழினத்தலைவனை எபோதும் மறவாது
தமிழினம் இனி எப்போதும் மறவாது தமிழினம்

தமிழினம் அழிகிறது..! தமிழகம் அழுகிறது
தலைவன் நீ என்ன செய்தாய்...??

தனி அறையில் ஓய்வெடுத்து திறம்பட நடித்து
முதுமையிலும் இளமை கண்டாய் - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்

தமிழ் என் பேச்சு தமிழே என் மூச்சு என்று சொன்னாய்
தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்துகொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று

தமிழைக்கொண்டே தமிழினை அழித்துவிட்டாய் - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது - எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம் - அது
ஒட்டு மொத்த தமிழர்களின் புதைகுழி என்றறியாமல்

தமிழனை குறைவாக எடைபோட்டாய்
தமிழனுக்கு எதிராக தடைபோட்டாய்
மடிந்தது உன் சூழ்ச்சி’
முடிந்தது உன் ஆட்சி

அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றென்னும் நீதியும் நிலைக்கட்டும்

அடிவயிறு எரிகின்ற மீனவப் பெண்களின் வெப்பம்
அப்படியே பொசுக்கட்டும்
ஆதிதமிழினம் அகிலத்தை ஆளும்
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்
அந்நியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்’
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்

சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !

உங்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப தன்மானப்போர்:
உங்களது உணர்ச்சிகளையும் கண்டனங்களையும் பதிவு செய்ய இந்த பதிவுகளையும் படித்து பங்கெடுத்துகொள்ளுங்கள்


அண்ணன் வைகை அவர்களின்
முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!


அண்ணன் கே ஆர் பி செந்தில்:
தமிழர்களின் எழுச்சி.. #tnfisherman...


நண்பர் ம. பாண்டியராஜனின்
எங்கள் உரிமை,உணர்வுகளை விடமாட்டோம்:


அண்ணன் ஜாக்கி சேகரின்:
ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு.. http://www.jackiesekar.com/2011/01/blog-post_30.html


நண்பர் உண்மைத்தமிழன்:
ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!


மேலும் உங்களது பங்களிப்பினை பகிர்ந்துகொள்ள நண்பர் நீச்சல்காரனின் இந்த பதிவை பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும்
இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?உங்களது உணர்வுகளையும் பங்களிப்புகளையும் நேரடியாக பகிர்ந்துகொள்ள


இணையதள முகவரி: http: //www.savetnfisherman.org/


ட்விட்டர் முகவரி: http://twitter.com/savetnfisherman


ஃபேஸ்புக் முகவரி:
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டர் தீ:


”கருணை இருக்கிறது நிதிதான் இல்லை என்றவரிடம் 'நிதி' களால் நிதி குவிந்ததால் கருணை காணாமல் போனதோ? #tnfisherman”


“விடைகொடு எங்கள் நாடே-அன்று கதறினார் ஈழத்தமிழர்கள். குரல் கொடு எங்கள் நாடே-இன்று தமிழக மீனவர்கள் #tnfisherman #நாளை தமிழர்களா ?”


“Marathamizhan RT @Prabha40: @kalvetu "பார்டரைத் தாண்டினால் சுடுவோம்" - ராஜபக்சே. "இங்கே பாடைகளும் இலவசம்!" - (இது யாருன்னு வேற சொல்லனுமா?) #tnfisherman”


neechalkaran R @ulavu புழுவைக்கூட குச்சியால் குத்தினால்,தன் தலையைத் தூக்கி எதிர்ப்பைக்காட்டும்.நம் அரசியல்வாதிகள் அதற்குக்கூட லாயக்கில்லை. #TNfisherman


saiganesh RT @ulavu: ஒத்த ரூவாக்கு அரிசி கொடுத்தவரே; பொங்கி வச்சிருக்கேன் என் புருஷன காணலயே #TNfisherman


verumpaye போதும் போதும் நீ தமிழ் வளர்த்தது போதும், தமிழச்சிகளின் தாலியை காத்திட ஏதாவது வழி செய்.. #tnfisherman
இதுபோன்று உங்கள் மனதில் உணர்ச்சிகளை ட்விட்டரில் #tnfisherman என்ற குறீயீடுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


இந்த பிரச்சினை உணர்வுள்ள தமிழனாக பங்கெடுத்து செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனி பங்கெடுக்கபோகும் நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்


தெய்வம் வந்து துன்பங்களை தீர்க்கும் என்று நம்பிடாதே
மண்ணில் பிறந்த உன்னால் புது மாற்றம் ஒன்று வந்திடுமே
நட நட நட வழி மாறீடாதே
நட நட நட விழி மூடிடாதே
நட நட நட வரும் காலம் நீயே
நட நட நட வா தூரத்தில் விடிவு இல்லையே


Don't buy your life
With people's money


Don't lie to your people
For the Shake of Popularity


Don't Sell our Freedom


People There want Food
and not your endless word


Are you Ready
Are you Clear
Are you Strong


"Lets Stand Together
and make difference"

பதிவர் : மாணவன்

No comments:

Post a Comment